திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 வயது சிறுமி 9 வயது சிறுவனால் பலாத்காரம்.. பிஞ்சிலேயே ஆ., படத்திற்கு அடிமை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
9 வயது சிறுவன் ஆபாச படங்களுக்கு அடிமையாகி, பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியில் 9 வயதுடைய சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில், செல்போனில் ஆபாச படங்களை கண்டு அதற்கு அடிமையாகியுள்ளார்.
தொடர்ந்து இவர் அதே பகுதியில் எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமியை விளையாடுவதற்காக கூட்டிசென்று, பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், வலி பொறுக்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை விசாரித்தனர். அப்போது சிறுமி அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டதும் சிறுமியின் பெற்றோர் அந்த சிறுவனின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சிறுவன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.