திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியை கடத்திச்சென்று சீரழித்த காமுகன்.. திட்டம்போட்டு நடந்த கொடூரம்... தட்டிதூக்கிய போலீஸ்.!
16 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த காமுகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் சந்தோஷ் சுபாஷ் கம்னே, டெல்லியின் தென்மேற்குப்பகுதி, பாலம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை கடத்திச் செல்வதற்காக திட்டமிட்ட நிலையில், சிறுமியை சில வருடங்களுக்கு முன்பாக கடத்திச் சென்றுள்ளார்.இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரியவர சந்தோஷை கைது செய்து, அவரிடம் சிக்கிய சிறுமியை மீட்டு சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சந்தோஷ் சுபாஷ் கம்னே மீது பல விதமான கொள்ளை மற்றும் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஜாமினில் வந்த அவர் 16 வயது சிறுமியை மீண்டும் கடத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். இதன்பின் சிறுமியின் வீட்டிற்கு இரவு யாருக்கும் தெரியாமல் சென்ற காமுகன் அவரை கடத்திய நிலையில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் தாயார் தனது மகளை காணாததால், பயந்து மீண்டும் ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தாயார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை கடத்தி சென்றது சந்தோஷ் சுபாஷ் கம்னே என்பவர் தான் என்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், சந்தோஷ் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் அந்த காமுகனிடமிருந்து சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.