மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டல் அறையில் இளம் பெண் சடலம்.. காதலன் கைது.. நடந்தது என்ன?
புனே அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் காதலியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனைவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் வந்தனா திவேதி. இவர் இன்று அதிகாலை ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக கிடைத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது மும்பை பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த இளைஞனும், இளம் பெண்ணும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அந்த சம்பவத்தன்று இவர்கள் இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.