திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவிக்கு தெரியாமல் வெளிநாட்டிற்கு சென்று காதலியை சந்தித்த காதலன் கைது: சுவாரசிய திருப்பு முனை..!
மும்பையைச் சேர்ந்த அவருக்கு 32 வயதாகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் காத்து வாக்கில் ஒரு கள்ளத்தொடர்பும் இருந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் தனது காதலியை சந்திக்க மனைவிக்கு தெரியாமல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த வியாழன் அன்று இரவு அவர் இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், அவர் மும்பை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரது வெளிநாட்டு பயணத்திற்கான விசா முத்திரைகள் இருக்க வேண்டிய வேண்டிய பாஸ்போர்ட்டில் உள்ள சில பக்கங்களைக் காணாதது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் தனது மனைவிக்கு தெரியாமல் வெளிநாடு சென்றது தெரியவந்தது. மேலும், அலுவலக வேலை காரணமாக வெளி மாநிலம் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, தனது காதலியை சந்திக்க வெளிநாடு சென்றுள்ளார். சந்தேகமடைந்த அவர் மனைவி அவரை செல்ஃபோனில் அழைத்தபோது, அவரது அழைப்புகளை எடுத்து பேசவில்லை.
இதன் பின்னர் அவர் வெளிநாடு சென்றது அவரது மனைவிக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் உள்ள விசா முத்திரை குத்தப்பட்ட பக்கங்களை கிழித்துள்ளார். பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது குற்றம் என்பது தெரியாமல் ஆர்வக் க்ப்ளாரில் பாஸ்போர்ட்டை கிழித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், வெளிநாடு சென்றதை தனது மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களை கிழித்ததற்காக கைது செய்யப்பட்டார். மோசடி குற்றம் செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.