மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாணம் முடிஞ்சு 18 நாள் ஆச்சு.. மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
திருமணம் முடிந்து 18 நாட்களில் புதுப்பெண் தனது காதலனுடன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ணுக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களில் பெண் வீட்டில் செய்யப்படும் சில சடங்கிற்காக புதுமண தம்பதியினர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து இருவரும் மீண்டும் கணவன் வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தநிலையில் மூர்த்தி ரைக்வார், அக்கிராமத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
வீட்டில் இருந்து காதலனுடன் ஓட்டம் பிடித்தது மட்டும் இல்லாமல், வீட்டில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் இருவரும் எஸ்கேப் ஆகியுள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே பெண் ஓடிப்போன விவரம் அறிந்து மாப்பிளை வீட்டார் பெண்ணின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திருமணம் முடிந்து 18 நாட்கள் கழித்து புதுமண பெண் காதலனுடன் ஓடிப்போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.