திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாலிகட்டும் நேரத்தில் மாப்பிளை செய்த காரியம்! மாலையை கழற்றி வீசிவிட்டு சென்ற மணப்பெண்! பகீர் சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் ராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் கோலாகாலமாக நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மறுநாள் புது ஜோடிகள் மாலையும் கழுத்துமாக திருமணதிற்கு தயாராக நின்று கொண்டுஇருந்துள்ளனர்.
அப்பொழுது மணமகனின் தங்கை பாடல் ஒன்றிற்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த மணமகன் கடும் கோபத்தில் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் மணமேடையிலேயே மாலையை தூக்கி எறிந்துவிட்டு எழுந்துள்ளார். பின்னர் என்னால் இவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் சகோதரியையே இப்படி அடிக்கிறாரே நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித்தானே அடிப்பார்.பெண்களை மதிக்க தெரியாத, முன்கோபகாரருடன் என்னால் வாழ முடியாது, எனக்கு இந்த திருமணம் வேணாம் என்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மணமகன் குடிபோதையில் இருந்ததாகவும் அதனாலேயே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் உறவினர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் ஏற்கவில்லை. அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.