நல்ல நண்பர் அப்பா.. அவரின் நினைவோடு.., - உயிரிழந்த இராணுவ வீரரின் மகள் நெகிழ்ச்சி பேச்சு.!



Brig LS Lidder Daughter Aashna Lidder Speech about Daddy

குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தந்தை குறித்து மகள் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் அருகே, இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மறைவு இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உலகளவில் இருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லியில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிரிக் எல்.எஸ் லிடரின் மகள் ஆஷ்னா லிடர் செய்தியாளர்களை சந்தித்து தந்தை குறித்து பேசினார். 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது தந்தை ஒரு உண்மையான நாயகன். எனது சிறந்த நண்பர். அவரின் விதி இப்படி என இருந்திருக்கலாம். எனது தந்தை எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார். 

எனக்கு தற்போது தான் 17 வயது ஆகப்போகிறது. 17 வருடங்கள் என்னுடன் தந்தை இருந்தார். இனிய நிகழ்வுடன் தொடர்ந்து முன்னே செல்வோம். எனது தந்தை உட்பட 13 பேரின் மரணம், தேசிய இழப்பு" என்று தெரிவித்தார்.