மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முறை மாறிய காதல்.. பெற்றோர் எதிர்ப்பு.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!
கர்நாடகாவில் அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள மானகெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பா. 24 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவர் அவரது உறவினரான சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் அண்ணன்-தங்கை உறவு என கூறி பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே சசிகலாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனாலும் தங்களது குடும்பத்தினர் பிரித்து விடுவார்கள் என பயந்த ஜோடி தங்களுடைய செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வாட்சப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிட்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெற்றோர் மறுத்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.