திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் திருமணம் செய்த தங்கையின் கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணன்.. பரபரப்பு சம்பவம்.!
தங்கையின் கணவன் தலையை துண்டாக்கி, 'இந்த தலையோடு குடும்பம் நடத்து' என கூறிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ஒரு பெண் தனது அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளார் . இந்நிலையில் அந்தப் பெண் அருகாமையில் உள்ள கலிகாதிகான் பகுதியில் வசிக்கும் 25 வயதான ஜாக்கி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் அண்ணன் அன்ஷுவுக்கு தெரியவர, மிகுந்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதனை அந்த பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மீண்டும் அவர்கள் காதலித்து வந்துள்ளனர். மேலும், தனது அண்ணனின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு சென்று ஜாக்கியை இவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக கேள்விப்பட்ட பெண்ணின் அண்ணன் துப்பாக்கி மற்றும் அரிவாளை எடுத்துக்கொண்டு தங்கையின் கணவன் இருக்குமிடம் தேடி சென்றுள்ளார். மேலும், அங்கு அவர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மூலமாக அவரின் தலையை துண்டாக்கி தனது தங்கையிடம் கொடுத்துள்ளார்.
அத்துடன் துண்டான தலையை வைத்து "உன் புருஷன் தலையுடன் குடும்பம் நடத்து" என்று கோபமுடன் கூறி சென்ற நிலையில், அண்ணனிடம் 'இவ்வாறு செய்து விட்டாயே' என அந்த பெண் கதறி அழுதுள்ளார். தொடர்ந்து இந்த கொலை குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கொலை செய்த அன்ஷூவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.