#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே... வெளிநாட்டுப் பெண்ணிற்கு கேரளாவில் நடைபெற்ற கொடூரம்... 2 பேர் கைது.!
கேரள மாநிலத்தில் வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே இருக்கும் கருநாகப்பள்ளியில் உள்ள அமிர்தபுரிக்கு அமெரிக்காவை சேர்ந்த 44 வயது பெண் சுற்றுலா வந்திருக்கிறார். அவர் கடற்கரையில் அமர்ந்திருக்கும் போது இரண்டு இளைஞர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்து நட்பாக பழகி உள்ளனர்.
பின்னர் அவரை ஆளில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து வந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த நிகில் மற்றும் ஜெயின் ஆகிய இரண்டு இளைஞர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டுப் பெண் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.