வலியால் துடித்த 19 வயது இளம்பெண்! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் என்ற இளம்பெண்ணிற்கு ஓராண்டாகவே முதுகு வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அஷ்மா பேகத்திற்கு பயங்கர முதுகு வலி ஏற்பட்டது. இதனால் வலியுடன் மருத்துவமனைக்கு அஷ்மா பேகம் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அஷ்மா பேகத்திற்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது உடலுக்குள் துப்பாக்கி குண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி குண்டை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சைக்கு பின்னர் துப்பாக்கி குண்டு வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் அஷ்மாவிடமும் அவர் தாயிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் உடலுக்குள் எப்படி துப்பாக்கி குண்டு போனது என தெரியாது என இருவரும் கூறினார்கள். போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.