மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்து - கார் மோதி அதிபயங்கர விபத்து.. 11 தொழிலாளர்கள் உடல்நசுங்கி துடிதுடித்து பலி..!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு பேருந்து, கார் மீது மோதி பயங்கரவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் இருந்து 11 தொழிலாளர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே காவல்நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பின் விபத்து குறித்த அறிந்த காவல்துறையினர் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து 7 பேரின் சடலங்களை மீட்ட நிலையில், விபத்தில் நசுங்கி காரில் இருந்த மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.