மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கத்திற்காக மூதாட்டியிடம் அத்திமீறிய இளைஞர்.. மனதை ரணமாக்கும் வீடியோ!
விசாகப்பட்டினம் அருகே தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கவரபாலம் என்ற பகுதியில் லட்சுமி நாராயணம்மா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போதே அங்கு வந்த கேபிள் டெக்னீசியன் கோவிந்த் என்ற நபர், மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து கொண்டார்.
இதனையடுத்து உடனடியாக அவர் கழுத்தில் அணிந்திருந்த கனமான தங்க சங்கிலியை நோட்டமிட்டுள்ளார். அப்போது திடீரென மூதாட்டியின் கழுத்தை துண்டால் இருக்கி பிடித்துள்ளார். இதனால் மூதாட்டி மூச்சு விட முடியாமலும், சத்தமிட முடியாமலும் மயக்கமடைந்தார்.
இதனிடையே அந்த இளைஞர் மூதாட்டி அணிந்திருந்த சுமார் 94 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
⚠️ Disturbing Clip⚠️
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 29, 2024
A young man who tied a towel around the neck of Lakshmi Narayanamma, who was alone in Anakapalli Gavarapalem Park Center, Andhra Prad, and gave her an 8-tula gold chain. In the CCTV footage, Govind, who works in cable, was identified
pic.twitter.com/D98iWCxYlH
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து திருடன் கோவிந்தை தேடி வருகின்றனர்.