மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குறைந்த வாடகையில் விடுதி.! குளிக்க சென்ற இளம்பெண் கண்ட அதிர்ச்சி காட்சி.! பகீர் சம்பவம்.!
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் ஆஷிஷ் கரே என்பவர் எப்படி விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் மருத்துவரின் மகனான அவர் கணினி லேப்பையும் நடத்தி வந்துள்ளார். அவர் தனது விடுதியை குறைந்த வாடகைக்கு விட்டதால், இளம்பெண்கள் ஏராளமானோர் அங்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது ஷவரில் தண்ணீர் வராததால் அவர் அதன் மூடியை கழற்றி பார்த்துள்ளார். அதில் கேமிரா ஒன்று ஒயருடன் இணைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார், விடுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்னர் கேமரா பொருத்தப்பட்டிருந்த உண்மையைக் கண்டறிந்த போலீசார் ஆஷிஷ் கரேவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கேமரா, 9 ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கண்ட போது, அவர் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தனது கணினி லேப்பில் இருந்தவாறு கண்டு ரசித்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களை வைத்து சில பெண்களை மிரட்டியதாகவும், வீடியோக்களை விற்றதாகவும் தெரிய வந்துள்ளது