இப்படிலாமா கலப்படம் செய்வாங்க; மக்களே உஷார்.... சமையல் எண்ணெயில் மாட்டுக் கொழுப்பா..?



Can they make a mistake like this; People beware....cow fat in cooking oil.

ஆந்திர மாநிலம் துனி நகரில் விலங்குகளின் கொழுப்பு, எலும்பு ஆகியவற்றில் இருந்து எண்ணெய் எடுத்து, சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து விற்பனை செய்த கும்பலை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

காக்கிநாடா மாவட்டத்தில் இருக்கும் துனி பகுதியில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிரடியாகச் சென்ற காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அந்த வீட்டில் ஏராளமான அளவுக்கு பசுவின் தோல்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல்,  எலும்புகள், வெட்டுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த பசுக்கள், பசுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

விலங்குகளின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றின் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த கலப்பட எண்ணெய்யை சிறிய உணவகங்கள் மற்றும் உள்ளூரில் இருக்கும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.