மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்னல்வேகத்தில் வந்து பைக்கில் மோதிய கார்! தூக்கிவீசி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட நபர்! வைரலாகும் பகீர் வீடியோ!
சத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதிய நிலையில், காரின் அடியில் சிக்கியவரை கொஞ்சம் கூட இரக்கமேயின்றி தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர் . மேலும் கற் மோதியதில் பைக்கில் வந்த நபர் ஒருவர் கார் சக்கரத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு இருந்துள்ளார். இருப்பினும் கார் ஓட்டுனர் அதனை பொருட்படுத்தாது, கொஞ்சம்கூட இரக்கமின்றி காரை நிறுத்தாமல் அந்த நபரை தரதரவென இழுத்தவாறே ஓட்டி சென்றுள்ளார்.
#WATCH Chhattisgarh: Two bike-borne men were hit by a car after which one of them was dragged by it on road in Raipur. Police say,"Accused has been arrested. The man who was riding the bike received minor injuries while other is seriously injured and admitted to hospital".(13.12) pic.twitter.com/vNJGga3gZM
— ANI (@ANI) December 14, 2019
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் ஒருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், காரில் இழுத்து செல்லப்பட்டவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த காரை ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.