வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு உச்சவரம்பு..!! மத்திய அமைச்சர் புதிய விளக்கம்..!!



ceiling on the number of cooking gas cylinders for household use

வீ்ட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது குறித்து பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி வீ்ட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையில் உச்சவரம்பு குறித்து கூறியதாவது:-

வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆண்டில், 15 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்காக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் உபயோகப்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும்போது, சமையல் எரிவாயு வினியோகஸ்தரிடம் நியாயமான காரணத்தை கூறி கூடுதல் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மீது 18% ஜி.எஸ்.டி வரியும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் மீது 5% ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுகிறது. நாட்டில் போதுமான அளவு சமையல் எரிவாயு கிடைக்கிறது எண்று அவர் கூறினார்.