மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகிழ்ச்சி செய்தி.. ஆண்களை விட பெண்கள் அதிகம்.. ஆனா அந்த விஷயத்துல....!
தேசிய குடும்ப சுகாதார சர்வே 2019 - 2021 இந்தியாவில் நடத்தப்பட்டது. இரண்டு கட்டமாக நடந்த குடும்ப சுகாதார சர்வே முடிவுகள் மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 88.6 % குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளது. கடந்த சர்வேயில் மருத்துவமனையில் குழந்தைகள் 78.9 % பேர் மருத்துவமனையில் பிறந்தனர். இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா வளரும் நாடுகளுடன் இணைகிறது.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், பெண்களை விட ஆண்கள் அதிகளவு உள்ள மாநிலமாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் உள்ளன. 2015 - 2016 ஆம் வருட காலகட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். கடந்த 2019 - 2020 சர்வேபடி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளனர்.
78 % தாய்மார்கள் பிரசவம் நடந்த 2 நாட்கள் வரை பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பை மருத்துவ பணியாளர்கள் மூலமாக பெற்றுள்ளார்கள். இதனால் குழந்தைகளின் இறப்பு விழுக்காடு குறைந்துள்ளது. கருத்தரிப்பு விகிதமும் பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்ற அளவில் இருக்கிறது. இது குடும்பக்கட்டுப்பாடு, தாமத திருமணம் போன்றவற்றின் விபரத்தை பெண்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
41 % குடும்பத்தில் ஒரு நபராவது சுகாதார காப்பீடு செய்து இருக்கின்றனர். முந்தைய காலத்தில் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது சுகாதார காப்பீடு செய்வது 28.7 % ஆக இருந்த நிலையில், தற்போது 41 % ஆக அதிகரித்துள்ளது.
திருமணம் முடிந்த பெண்களில், மூன்றில் இருபங்கு பெண்கள் (66.7 %) கருத்தரிப்பை தள்ளிப்போட விரும்புகின்றனர். குடும்பக்கட்டுப்பாடு தேவையும் 9.4 % ஆக குறைந்துள்ளது. 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை சற்றே முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.