பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!!



Central Govt instructs to renew Aadhaar card every 10 years..!!

10 வருடங்கள் முடிந்த ஆதார் கார்டு புதுப்பிக்க, ஆதார் பதிவு மையம் அல்லது பொது சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். 

புதுடெல்லி, அரசு ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு, பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமென ம?பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இவ்வாறு கூறியுள்ளது:- 

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து, ஒவ்வொரு 10 வருடங்களுக்கு பிறகு, , முகவரி மற்றும் அடையாள சான்று போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பிப்பதால் மத்திய அரசின் தரவுகளில் தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்தப்படும். மேலும் ஆணையம் குறிப்பிடும் காலத்திற்குள் இவற்றை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், பத்து வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்றவர்கள், அதன் பிறகு இதுவரை புதுப்பிக்கவில்லை என்றால்  அவர்கள் சரியான ஆவணங்களைப் அளித்து புதுப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆதார் கார்டு எடுத்து பத்து வருடங்கள் முடிந்தவர்கள் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மை ஆதார் போர்டல் மூலமாக விவரங்களைப் புதுப்பிக்கலாம். இல்லாவிட்டால் பொது சேவை மையம் அல்லது ஆதார் பதிவு மையத்தில் புதுப்பிக்கலாம்.