"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மத்திய அரசுத்துறைகளில் 8 இலட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர்கள்.!
நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் மத்திய அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பதிலளித்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் கேள்வி நேரத்தின் போது அரசுத்துறை காலியிடங்கள் குறித்து மத்திய மந்திரிகள் தங்களின் பதில்களை அளித்தனர். இதில், மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தனது பதிலை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "01.03.2020 நிலவரத்தின்படி மத்திய அரசின் 77 துறைகளில் சுமார் 40 இலட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், 31 இலட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணியாற்றி வருகிறார்கள். 8 இலட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடம் காலியாக உள்ளது. மேற்கூறிய புள்ளி விபரங்கள் செலவினத்துறையில் இருந்து பெறப்பட்டது" என்று தெரிவித்தார்.
அதனைப்போல, மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "இரயில்வே துறையில் 2.98 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1.40 இலட்சம் பணியிடங்களுக்கான ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை நடைபெறுகிறது. பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேசுகையில், "இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 4,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கரக்பூர் ஐ.ஐ.டி-யில் 815 காலிப்பணியிடமும், மும்பை ஐ.ஐ.டி-யில் 532 காலிப்பணியிடமும், தன்பாத் ஐ.ஐ.டி-யில் 447 காலிப்பணியிடமும், சென்னை ஐ.ஐ.டி-யில் 396 காலிப்பணியிடமும், கான்பூர் ஐ.ஐ.டி-யில் 351 காலிப்பணியிடமும், ரூர்க்கி ஐ.ஐ.டி-யில் 296 காலிப்பணியிடமும் உள்ளது" என்று தெரிவித்தார்.