மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி பெண்களிடம் சில்மிஷ சேட்டைகள் முடியாது - அஸ்திவாரத்தை பலமாக்கும் அதிரடி அறிவிப்பு வெளியீடு.!
பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு இடங்களிலும் நடைபெறும் வன்முறைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழக மானியக்குழு கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு வழிமுறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு உடல் & உளவியல் ரீதியில் ஏற்படும் பிரச்சனைக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் தொடர்பான கையேடுகளை வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் சார்பில் ஏதேனும் புகார் அளிக்கப்படும் பட்சத்தில், அதற்கு விரைந்து தீர்வு கண்டு பிரச்சனை சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.