மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேறு துவங்கியது. பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தாக்கல் செய்தார். அப்போது 18 முதல் 35 வயது வரையிலான வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் உதவித் தொகை பெறுவதற்கான தகுதி குறித்து வரையரை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.