மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொந்த மகளை ரூ.2 இலட்சத்திற்கு விற்ற தந்தை.. 5 ஆண்டுகளாக வீட்டில் சிறைவைத்து பலாத்காரம் செய்த காமுகன்கள்.!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தான் மாவட்டத்தை சார்ந்த 16 வயது சிறுமி, அவரது தந்தையால் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை தங்களுடன் அழைத்துச் சென்ற உறவினர்கள் தந்தையும், மகனுமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியாக சிறுமியை பயன்படுத்திய குற்றவாளிகள், தொடர்ந்து பலமுறை பலவந்தப்படுத்தி அத்துமீறி இருக்கின்றனர். குடும்ப வறுமை காரணமாக ரூ.2 லட்சம் பணத்திற்கு விற்கப்பட்ட 16 வயது சிறுமி வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஐந்து ஆண்டுகள் கடந்து தப்பி வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கயவர்களின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என்று போராடிய சிறுமி, அனுதினமும் தந்தை மற்றும் மகனின் பாலியல் பலாத்காரம் தொடர்பான நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளார்.
குழந்தை பிறந்த பின்பு தனது வாழ்க்கை இப்படித்தான் என்பதைப் போல பாவித்து, அதனை ஏற்றுக் கொள்வதைப் போல நடித்து இறுதியாக சாதூரியமாக அங்கிருந்து தப்பி வந்து இருக்கிறார்.