மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேஸ்புக் லவ், மேரேஜ்.. பணக்கார தோற்றம் வெளுத்ததால் பெண் கண்ணீர்.. ஆணவக்கொலை சம்பவம்?.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் நரசாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் நிஷாந்தி (வயது 19). கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் மக்பூல் (வயது 22). நிஷாந்திக்கும் - மக்பூலுக்கும் இடையே முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி இருக்கிறது.
இந்நிலையில், முகநூலில் காதலிக்கும் காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், நிஷாந்தி கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளார். மேலும், என்னை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பமும் கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடி திருமணம் செய்து கரம்பிடித்த நிலையில், இருவரும் கர்நாடகாவிலேயே வசித்து வந்துள்ளனர். வசதியான வீட்டு பெண்மணியாக வாழ்ந்து வந்த நிஷாந்திக்கு திருமணம் முடிந்ததும் காதலனின் உண்மை பின்னணி தெரியவந்துள்ளது.
முகநூலில் விதவிதமாக மக்பூல் பதிவு செய்த புகைப்படத்தை கண்டும், அவரின் பதிவுகளை கண்டும் தன்னை போல செல்வந்தர் என எண்ணியிருந்த நிஷாந்தினிக்கு பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து காத்திருந்துள்ளது. இதனால் தந்தை ராஜேந்திரனுக்கு தொடர்பு கொண்ட நிஷாந்தி, தன்னிலை குறித்து கண்ணீர் மல்க விவரித்து இருக்கிறார். மேலும், தன்னை வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியும் கோரிக்கை வைத்துள்ளார். மகளின் கண்ணீர் குரலை கேட்டதும் மனமிறங்கிப்போன ராஜேந்திரன், மகள் - மருமகளை சென்னை அழைத்து வந்து தனி வீட்டில் குடித்தனம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக நிஷாந்தினியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த மக்பூல் நண்பர்களுடன் இருந்து வந்த நிலையில், நேற்று அவர் பணிக்கு வரவில்லை. இதனால் அவரின் நண்பர்கள் மக்பூலை பார்க்க வீட்டிற்கு வந்தபோது, அவரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. பதறிப்போன நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது, மக்பூலின் உடலில் வெட்டுக்காயம் மற்றும் தீக்காயத்துடன் பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் மக்பூலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி மக்பூல் உயிரிழந்ததாக தெரியவருகிறது. விசாரணை தொடர்ந்து வருகிறது.