மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர் செய்யும் வேலையா இது?.. 2 பேர் கைது..! சென்னை டூ பாண்டிச்சேரி சம்பவங்கள்.!
சுற்றுலாத்தலமாக கருதப்படும் பாண்டிச்சேரியில் சட்டவிரோத செயல்களுக்கும் பஞ்சம் இல்லை. விபச்சாரம், ரவுடியிசம், கஞ்சா விற்பனை என்று நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த அம்மாநில காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி வில்லியனூர் மங்களம் காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில், சாத்தமங்கலம் சாலையில் கண்காணிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது, ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்றுகொண்டு இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது 3 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல் துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த வசந்தராஜா (வயது 25), சென்னை மதுரவயலை சேர்ந்த செல்வா (வயது 25) என்பதும் தெரியவந்தது. கல்லூரியில் மாணவராக இருந்தும் வரும் செல்வா, கஞ்சா வாங்க வந்தபோது சிக்கிக்கொண்டதும் அம்பலமாகியுள்ளது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.