#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாண்டிச்சேரி இன்பச்சுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்; ஐடி ஊழியர்கள் இருவர் பலி.!
சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சுந்தர் (வயது 26). பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கோகுல் பிரசாத். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் கம்பியூட்டர் இஞ்சினியராக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தங்களின் நண்பர்கள் 4 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின் வாடகைக்கு எடுக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், பிச்சாவரம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பிச்சாவரம் கடலில் படகு சவாரி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போன் வெடித்ததால் நடந்த சோகம்; டூ-வீலரில் சென்றவர் தலையில் படுகாயமடைந்து பலி.!
இருவர் பரிதாப பலி
இதற்குப்பின் புதுச்சத்திரம், சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் மதியம் ஷியாம் சுந்தர் மற்றும் கோகுல் பிரசாத் குளித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம் எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், இவர்களை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை மறுநாள் சுடவைத்து சாப்பிட்ட இளைஞர் பலி.. மதுரையில் சோகம்.!