ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#JustIN: 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டின் வளிமண்டல பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குளுகுளு சூழ்நிலையை மக்கள் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த கோடைகாலம் என்பது மக்களை கடுமையாக வாட்டி வதைத்த விஷயமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். வெயில் சார்ந்த பிரச்சனைகள் வடமாநிலங்களில் மரணத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
27 மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு
இந்நிலையில், இரவு 9 மணி வரையில் தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, மதுரை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதையும் படிங்க: #Breaking: மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!