கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#Breaking: மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு சாதகமான மழை வாய்ப்பானது எதிர்பார்க்கப்படுகிறது. பல மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
இந்நிலையில், இன்று மாலை 4 மணி வரையில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மஞ்சள் எச்சரிக்கை
அதேபோல, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மழைக்கான அறிவிப்பு மாலை 4 மணியளவில் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும்.
இதையும் படிங்க: மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி; ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!