கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#Breaking: மதியம் 1 மணிவரையில் நாகை, குமரி உட்பட 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்.!
தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக ஏழாம் தேதியான இன்று கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இடி-மின்னல், சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை; குளுகுளு சூழ்நிலையால் கொண்டாட்டத்தில் மக்கள்.!
நேற்று தமிழ்நாட்டின் பரவலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்தது. நேற்று காலை மற்றும் மதியம் என அடுத்தடுத்த மாவட்டங்களில் இரவு வரை கனமழை தொடர்ந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் குளுகுளு சூழ்நிலையினை அனுபவித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: #JunstIN: 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!