மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நாளை பொளந்துகட்டப்போகும் மழை; 4 மாவட்டங்களில் விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தமிழ்நாட்டில் நிலவி வரும் வானிலை, வடகிழக்கு பருவமழை தொடக்கத்தை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிககனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழை அலர்ட்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நகரின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது. ஒருசில இடங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது.
4 மாவட்டங்களில் விடுமுறை
இந்நிலையில், அக்.16ம் தேதியான நாளையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் மேற்கூறிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிற மாவட்டங்களின் மழை நிலவரத்தைப்பொறுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாலத்துல இப்பவே இடம் பிடிச்சிரலாம்.. வெள்ளத்தை நினைத்து வேதனையில் வேளச்சேரி மக்கள்.. செய்த காரியம் என்ன?
இதையும் படிங்க: வெளுத்துவாங்கும் மழை; பள்ளி-கல்லூரிகளுக்கு 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!