#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லாரி மீது டூவீலர் மோதி பயங்கரம்; 17 வயது சிறுவன் பரிதாப பலி., காவல்துறையின் அறிவுரை ஏற்காததால் சோகம்.!
சென்னையில் உள்ள வடபழனி பகுதியை சேர்ந்தவர் சுகணேஷ்வர். 17 வயதாகும் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவன் அவ்வப்போது இருசக்கர வாகனத்தை இயங்குவதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், நேற்று தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிய சுகனேஷ்வர், இருசக்கர வாகனத்தில் வடபழனி பகுதியில் சென்றுகொண்டு இருந்தார்.
சிறுவன் பரிதாப மரணம்
வடபழனி மெட்ரோ மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டு இருந்த சிறுவன், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சிறுவன் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்; பொறுமை தாங்காமல் மனைவி செய்த காரியம்.! சென்னையில் அதிர்ச்சி.!
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடபழனி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே சிறார்கள் வாகனம் இயக்கினால் பெற்றோரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்து இருக்கின்றனர். அதனையும் மீறி செயல்படும் பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்காமல் இருப்பதும், பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரையை ஏற்காமல் செயல்படுவதும் இவ்வாறான துயரத்திற்கு வழிவகை செய்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் குத்தகைக்கு வீடு வாங்க நினைக்கிறீங்களா?. புதிய வகை மோசடி.. அலெர்ட் மக்களே.!