#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே, இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சிறுமியின் முகத்தை ஆபாசமாக சித்தரித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாணவியை மர்ம நபர் மிரட்டியதாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த கணமே விபரீதம்.. கண்ணீரில் மனைவி.!
காவல்துறையினர் விசாரணை
இதனால் மனமுடைந்துபோன மாணவி, இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் செயலி வாயிலாக சிறுமி மர்ம நபரால் மிரட்டப்பட்டது தெரியவரவே, அதிகாரிகள் மாணவிக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தீராத சர்க்கரை நோயுடன் கால்களில் புண்கள்; மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கிய நோயாளி.!