மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய வரலாற்றில் முதல் முறை.. 10 மாத கைக்குழந்தைக்கு இரயில்வே பணி.. பின்னணியில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!
விபத்தில் இரயில்வே ஊழியர் மற்றும் அவரின் மனைவி உயிரிழந்துவிட, வாரிசு அடிப்படையில் இரயில்வே ஊழியரின் பெண் குழந்தைக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் 18 வயதை கடந்ததும் விருப்பத்தின் பேரில் பணியில் சேரலாம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வந்தவர் ராஜேந்திரகுமார். இவர் இப்பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரின் மனைவியும் உயிரிழந்துள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்துள்ளார்.
தற்போது பாட்டியின் பராமரிப்பில் 10 மாத குழந்தையான ராதிகா யாதவ் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் ரயில்வே விதியின்படி, ராதிகாவுக்கு தந்தையின் பணியானது வழங்கப்பட்டுள்ளது. அவர் சிறுகுழந்தை என்பதால் கைரேகையை பதிவு செய்து பணி நியமனமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் போது, விருப்பத்தின் பேரில் பணியில் சேரலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரயில்வே பணிக்கு 10 மாத குழந்தை ரயில்வே பணிபெற்று சாதனை புரிந்துள்ளது.