காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இலங்கையில் சீன உளவு கப்பல்... எச்சரித்த இந்தியா.! ஓகே சொன்ன இலங்கை.. ஆனால் சீனாவின் அதிரடி.!
இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவுக் கப்பலை, ஆகஸ்டு 11 - 17 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உளவுக் கப்பல் வாயிலாக தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள், அணுசக்தி மையங்களை வேவு பார்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என, இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. இந்தநிலையில், 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையை சீனா வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அதை ஏற்கவில்லை.
இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம். எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் தடையை மீறி சீனாவின் 'யுவான் வாங்-5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.