ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் திடீர் தற்கொலை; லாட்ஜ் அறையில் பகீர் சம்பவம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தி உள்ள விடுதி ஒன்றில், கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சதீஷ் அறையெடுத்து தங்கி இருக்கிறார்.
இதனிடையே, அவர் பெண் ஒருவருடன் தங்கி இருந்த நிலையில், நேற்று அவரின் அறையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பனின் மனைவியை அபகரிக்க நினைத்த தோழன்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக பச்சை துரோகம்.!
அதிகாரிகள் விசாரணை:
தகவலை அறிந்த காவல் துறையினர், விடுதிக்கு வந்து பார்த்தபோது சதீஷின் உடல் தூக்கில் தொங்கியவாறு கண்டெடுக்கப்பட்டது. பின் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சதீஷுடன் தங்கியிருந்த பெண் யார்? எனவும் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!