மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொலைந்து போன ஸ்கூட்டர் சாவி; சக மாணவர்கள் தானே என்று நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!
ஒடிசாவில் சுந்தர்கார் மாவட்டம் மலிதியா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் லாவண்யா(19). இவர் கின்ஜிரிகேலா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு ஸ்கூட்டியில் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று இவருடைய ஸ்கூட்டி சாவி தொலைந்து விட்டது. இதனால் கல்லூரியிலேயே லாவண்யா நின்று கொண்டிருந்துள்ளார். அவரை கண்ட அவருடன் படிக்கும் சக மாணவர்களான நிலிந்ரா ஓரம், ஜெய்தாப் கிஷான் ஆகியோர் அவரது வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார்கள்.
தன்னோடு படிக்கும் மாணவர்கள் தானே என்று நம்பி அவர்களது பைக்கில் லாவண்யா சென்றுள்ளார். அவர்களைப் பின்தொடர்ந்து மூன்றாவதாக ரஞ்சித் ஓரம் என்ற மாணவனும் சென்றுள்ளான். செல்கின்ற வழியில் புடுதிங் என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் பைக்கை நிறுத்தி உள்ளார்கள்.
அங்கு மேலும் இரண்டு நபர்கள் வந்துள்ளார்கள். மொத்தம் ஐந்து பேரும் சேர்ந்து அந்த மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி லாவண்யாவை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதுமுதல் கல்லூரிக்குச் செல்லாமல் இதுவரை மௌனம் காத்து வந்த லாவண்யா மூன்று வாரங்கள் கழித்து தனது தாயாருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்து உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 4பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.