மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவி சாகித்யா. இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே கல்லூரியில் நடத்திய விசாரணையில் மாணவி, தனது கோழிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அந்த கடிதத்தில், 'உன்னிடம் சொல்லாமல் போனதற்கு என்னை மன்னித்து விடு. நீதான் என் உயிர் தோழி. கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. என் மூளை ஒட்டுமொத்தமாக இறந்து கொண்டிருக்கிறது. உன்னுடன் நட்பாக பழகிய யாரும் உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்க மாட்டார்கள் என எழுதியுள்ளார்.
இந்த கல்லூரியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 25 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.