#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பஞ்சாப் எம்.எல்.ஏ.வை கரம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ!
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியிள் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அதிதி சிங். இவர் அந்த தேர்தலில் அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அங்கத் சைனிக்கிற்கும் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு அதிதி சிங் ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக காங்கிரஸ் கட்சி அதிதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
அவரது திருமணம் பற்றி பேசிய அதிதி, எனது தந்தையின் மறைவுக்கு முன்பே திருமணம் முடிவானது. அதனால் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே திருமணத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.