"தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்"; சர்ச்சை பேனரால் அதிர்ச்சி.. டிசைனர் உட்பட 3 பேர் கைது.!



Controversy Flex Banner on Sivaganga 3 Arrested 

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆன்மீக பக்தர்கள் பலரும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வாங்கி வைத்து வழிபாட்டு மகிழ்ந்தனர். ஊருக்கு பொதுவாக அந்தந்த கிராம இளைஞர்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

ஒருசில இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ப்ளக்ஸ் பெயரும் வைக்கப்பட்டது. இதனிடையே, அதில் சர்ச்சைக்குரிய வசனமும் இடம்பெற்றன. சமீபகாலமாகவே பேனரை வித்தியாசமாக அடிக்கிறோம் என்ற பெயரில், காமெடி ட்ரெண்ட் வழக்கமானதாக மாறி உள்ளது. 

இதையும் படிங்க: திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!

சர்ச்சை பேனர் வைத்தால் நடவடிக்கை பாயும்

அதேவேளையில், சமூகவிரோத சக்திகளை பெரிய அளவிலான நிலையில் எண்ணிக்கொண்டு திரியும் ஒருசில இளைஞர்கள், சர்ச்சைக்குரிய வசனத்துடன், மோதல் போக்கை ஏற்படுத்தும் வண்ணம் அதனை மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயல்கள் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைகள் சிதைக்கப்படும்

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அச்சடிக்கப்பட்ட பேனர் ஒன்றில், "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்" என்ற கொலை மிரட்டல் வசனத்துடன் தகவல் இடம்பெற்று இருந்தது. 

டிசைனர் உட்பட 3 பேர் கைது

இதனால் இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பேனர் வைத்த கல்லூரி மாணவர் முத்துக்குமார், அதனை அச்சடித்துக்கொடுத்த ப்ளக்ஸ் பேனர் கடை உரிமையாளர், பேனரை டிசைன் செய்த நபர் ஆகியோரை கைது செய்தனர். மானாமதுரையில் இவ்வாறான சர்ச்சை பேனர் வைத்த 2 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ப்ளக்ஸ் பேனர் அச்சடித்து கொடுப்போர், தாங்கள் டிசைன் செய்யும் பேனரில் இடம்பெறும் வசனங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தால், அவ்வாறான வசனங்களை பதிவிடாமல் இருப்பது நல்லது. மாறாக செயல்பட்டால், தேவையில்லாமல் வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றி, இவ்வாறான சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

 
 

 

 

இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது சோகம்; 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.!