தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: கோரமண்டல் அதிவிரைவு இரயில் பைலட் மரணம்; சிகிச்சை பலனின்றி பரிதாபம்.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில், 3 இரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு இரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற துரந்தோ இரயில், சரக்கு இரயில் ஆகியவை விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் கோரமண்டல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்த 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு மனித அலட்சியம் தான் முக்கிய காரணம் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கும் இரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து புவனேஸ்வர் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருந்த கோரமண்டல் அதிவிரைவு வண்டியின் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இரயில் எஞ்சின் ஓட்டுநர் மீது எவ்வித தவறும் இல்லாத நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக பெரும் சோகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.