இந்த கிராம மக்கள் போல அனைவரும் இருந்திருந்தால் கொரோனாவை ஒழித்திருக்கலாம்.! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராமம்.!



corona awareness for village people

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்தியாவின் நிலையைக் கண்டு உலக நாடுகள் கவலை கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமெடுத்து வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாரா என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள், கொரோனாவை எதிர்கொள்ள ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இந்த கிராமத்தில் 260க்கு மேற்பட்ட வீடுகளும், சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சரி, தற்போதும் சரி இந்த கிராமத்தில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

odhisa

இந்த கிராமத்தில் கொரோனா பரவல் இல்லாததற்கு முக்கிய காரணம், மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு தான். பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முறையாக முக கவசங்களை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். இங்குள்ள கிராமவாசிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்கின்றனர். 

அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக 2020 முதலே கொரோனா வைரசை கிராமத்திற்குள் நுழையவிடாமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.