மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 35,551 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 94,99,413-ல் இருந்து 95,34,964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 40,726 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,73,373 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 526 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.