மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு.! 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை.!
உலகத்தையே உலுக்கிய கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில்தான் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.
ஒமைக்ரான் அச்சுறுத்தலையொட்டி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனைத்து விமான நிலையத்தில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆய்வு கூடங்கள் 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு நடத்திய சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோ தொழில்நுட்ப ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்போது 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் 2 பேரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.