2-வது அலையை விட 2 மடங்கு அதிகமானோர் 3-வது அலையில் பாதிக்கப்படுவார்கள்.! மகாராஷ்டிரா நிபுணர் குழு எச்சரிக்கை.!



corona third wave in magarastira

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை குறைந்துவருகிறது.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக மோசமாக இருந்தது. தற்போது அங்கு 2-வது அலை பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிரா மாநில மருத்துவ கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

corona

ஆய்வில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா 3-வது அலை தாக்கும். 2-வது அலையை விட இரண்டு மடங்கு அதிகம்பேர் 3-வது அலையில் பாதிக்கப்படுவார்கள். எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மகாரஷ்டிரா மாநிலத்தில் 2-வது அலையில் மட்டும்  40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். முதல் அலையில் 19 லட்சம் பாதிக்கப்பட்டனர். தற்போது 3-வது அலை 2-வது அலையை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் 80 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.