மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா ஆத்திச்சூடி.! இந்த சமயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்னென்ன?
இந்தியாவில் தற்போது புதிதாக படை எடுத்து கோர தாண்டவம் ஆடி மக்களை அச்சுறுத்தி வரும் வைரஸ் தான் கொரோனா. இதனால் இதுவரை 600க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிர கணக்கான மக்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்நோயால் இதுவரை 10க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் எவ்வாறு இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பது என்பது குறித்து ஆத்திச்சூடி வழியில் விழிப்புணர்வை ஏற்ப்படும் வகையில் வெளியாகியுள்ளது. அதன்படி நாம் செயல்பட்டால் இந்த கொடிய நோயிலிருந்து நாம் விடுப்படலாம்.
*கொரானா ஆத்திசூடி*
*அ* டிக்கடி கை கழுவு
*ஆ* பத்தை அறிந்து கொள்
*இ* ல்லத்தில் தனித்திரு
*ஈ* ரடி தள்ளி நில்
*உ* ற்றாரை ஒதுக்கி வை
*ஊ* ரடங்கை மதித்து நட
*எ* ங்கேயும் சுற்றாதே
*ஏ* க்கத்தை அடக்கி வை
*ஐ* யமின்றி அனைத்தும் உண்
*ஒ* துங்கியிருக்கக் கற்றுக்கொள்
*ஓ* ரிடத்தில் ஓய்ந்திரு
*ஔ* ஷதமில்லை கொரானாவிற்கு
இ *ஃ* து அறிதலே இனிய வாழ்வு.