மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்றியுள்ளது.
கமால் கேரா என்ற கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நேற்று புதன்கிழமை உறுதிமாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடாவில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர் தான் இவர். இவரது உறவினர்கள் பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இன்னும் வசித்து வருகின்றனர்.
கனடாவின் டொரோன்டா மாகாணத்தில் மேற்கு பிராம்ப்டன் தொகுதியிலிருந்து கடந்த 2015 ஆம் இவர் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 2019 தேர்தலிலும் வெற்றிபெற்றார்.
இவருக்கு கடந்த சனிக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து தனிமையாக இருந்த அவருக்க கடந்த திங்கட்கிழமை மாதிரிகள் எடுக்கப்பட்டன. நேற்று வந்த முடிவுகளின்படி அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்தும் அவர் தனிமைப்படுத்தக்கொண்டுள்ளார்.
A personal update from me. Thank you all for your support. #COVID19 pic.twitter.com/GoJKKRjKcZ
— Kamal Khera (@KamalKheraLib) March 25, 2020