திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்ளீஸ்..அலட்சியமா இருக்காதீங்க! கொரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர் ! நெஞ்சை உருக்கும் அவரது கடைசி வீடியோ!!
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொடூர வைரஸ்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் 34 வயது நிறைந்த டிம்பிள் அரோரா. பல் மருத்துவரான அவருக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்த நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்தநிலையில் டிம்பிள் அரோராவிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 14 நாட்களில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்களில் அந்த மருத்துவரும் உயிரிழந்தார்.
I lost my pregnant wife and our unborn child to covid
— Ravish Chawla (@ravish_chawla) May 9, 2021
She breathed her last on 26/4/21 and our unborn child a day earlier. She got covid positive on 11/4 and even during her suffering she had made the above video on 17/4 warning others not to take this covid lightly. #CovidIndia pic.twitter.com/Syg6yddMTD
இதற்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரோரோ எடுத்து வைத்திருந்த வீடியோவை தற்போது அவரது கணவர் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டிம்பிள், கொரோனா மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. அதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருக்காதீர். கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்போது என்னால் பேசக்கூட முடியவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பேசுகிறேன். அனைவரும் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என கண்ணீருடன் கூறியுள்ளார்.