#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிட்னிய வித்தா 2 கோடி பணம்..! ஆனால்.? 2 கோடிக்கு ஆசைப்பட்ட கணவன் மனைவிக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி ஒருவர் 2 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு 17 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் காமேஸ்வர் மற்றும் பார்கவி தம்பதியினர். இவர்கள் படமட்டா என்ற பகுதியில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் காரணமாக தம்பதியினருக்கும், அவர்களது கூட்டாளிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரச்சினையைத் தீர்க்கவும் கடன் தொல்லையிலிருந்து மீள வேண்டி பார்கவியின் ஒரு கிட்னியை விற்பனை செய்ய தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கிட்னியை விற்பது தொடர்பாக இணையதளங்களில் விவரங்களை சேகரித்து அதன் மூலம் டெல்லியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பிவைக்கவே, மருத்துவமனையில் இருந்து பேசுவதாக சோப்ரா சிங் என்ற நபர் தம்பதியினருக்கு போன் செய்து ஒரு கிட்னிக்கு 2 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் கிட்னியை தானமாக கொடுப்பதற்கு முன் 17 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என சோப்ரா சிங் தம்பதியினரிடம் கூறியுள்ளார்.
2 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தம்பதியினரும் அவருக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சோப்ரா சிங் கூறிய வங்கி கணக்கிற்கு தம்பதியினர் 17 லட்சம் ரூபாய் பணத்தை 24 தடவையாக செலுத்தியுள்ளனர்.
இரண்டு கோடி ரூபாய் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் தம்பதியினர் 17 லட்சம் ரூபாயை கடனாக பெற்று அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். 17 லட்சம் ரூபாயை செலுத்திய பிறகு சோப்ரா சிங்கிடம் கிட்னி தானம் வழங்குதல் மற்றும் இரண்டு கோடி ரூபாய் குறித்து கேட்டபோது மேலும் 5 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என அவர் கூறியதாக தெரிகிறது.
அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். இரண்டு கோடி ரூபாய் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.