திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுநீருக்கு கிடைத்த மவுசு! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா? சூடுபிடித்த வியாபாரம்!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உயிரை பறிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மாட்டின் சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் கொரோனா வைரஸை அண்டவிடாமல் பாதுகாக்கும் என்று சில நபர்கள் கூறி, மேற்கு வங்கம் மாநிலத்தில் பால் வியாபாரி ஒருவர் மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணத்தை ரூ.500 வரை விற்பனை செய்து வருகிறார்.
மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் கொரோனா வைரசிடமிருந்து நம்மைக் காக்கும் என ஒருசில நபர்கள் கூறிவந்த நிலையில், மேற்குவங்கத்தில் மபூத் அலி என்ற பால் வியாபாரி பசுவின் சாணத்தைப் பாக்கெட்டில் அடைத்தும், சிறுநீரைப் பாட்டிலில் நிரப்பியும் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பால் வியாபாரி மபூத் அலி கூறுகையில், ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, சாணம் மற்றும் கோமியத்தை விற்பனை செய்து சம்பாதிக்கலாம் நினைத்தேன்.
அவற்றில் எதிர்ப்பு சக்திகள் உள்ளதால் மக்கள் பயனடைவார்கள் என விற்பனை செய்தேன். நாட்டுப்பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மதநம்பிக்கைகளை வைத்து ஏமாற்றுவதாக கூறி இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.