மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இப்படியொரு படைப்பா.! மனித பற்களுடன் வித்தியாசமான நண்டு.! திகைக்க வைக்கும் புகைப்படம்!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான பறவைகள், விலங்குகள் குறித்த வீடியோக்கள் வெளிவந்து பெருமளவில் வைரலாகும். அவற்றில் சில பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும், ஆச்சரியப்படவைக்கும் வகையிலும் இருக்கும். அந்த வகையில் தற்போது நண்டு ஒன்றின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ரோமன் பெடோர்சோவ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ப்போர் திகைக்கும் வகையில் நண்டு ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது சாதாரண நண்டு அல்ல, மனிதனை போன்ற பற்களை கொண்ட வித்தியாசமான நண்டு.
அந்த போட்டோவை வெளியிட்ட புகைப்பட கலைஞர் ரோமன் பெடோர்சோவ், அது நண்டு தான், இயற்கை அன்னையின் வித்தியாசமான படைப்பை பாருங்கள் என கூறியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு பகிர்ந்த அந்தப் படம் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் பல கமெண்டுகளை குவித்து வருகிறது.